அச்சத்தில் கிராம மக்கள் திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம்

திருச்சி, பிப்.17: திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் துப்பாக்கியை காட்டி செல்போன்களை பறித்து சென்றது தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முகமதுஅபுபக்கர்(23), சர்கான்(22), உஸ்மான்(21), ரகபர்சாதிக்(22), வயநாடு பகுதியை சேர்ந்த வினிபர்ஜமால்(23). இவர்கள் 5 பேரும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் அபுபக்கர் மட்டும் மன்னார்புரம் நியூ காலனி அருகே தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். மற்றவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 5 பேரும் நண்பர்கள். கடந்த 13ம் தேதி முகமதுஅபுபக்கருக்கு சொந்தமான காரில் நண்பர்கள் 5 பேரும் வெளியில் சென்றுவிட்டு மன்னார்புரம் சுற்றுலா மாளிகை பகுதியிலுள்ள பழைய ஹவுசிங் போர்டு அருகே நள்ளிரவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அபுபக்கர் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் இன்னொருவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்தனர். இதனை எதிர்த்து கேட்டபோது மர்ம கும்பலில் இருந்த ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டிவி–்ட்டு கார்களில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சம்பவத்தன்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த ஒருவரிடமிருந்து ஏதோ ஒரு பார்சலை 5 பேரும் வாங்கி வந்துள்ளனர். அந்த பார்சல் தங்கமா அல்லது வேறு எதுவும் பொருளா என தெரியவில்லை. செல்போன்களுடன் சேர்த்து அந்த பார்சலையும் மர்ம நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர். மர்ம நபர்கள் வந்த 2 கார்களும் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது இது தெரியவந்தது.

மேலும் 2 கார்களில் வந்த அனைவரும் மலையாள மொழியில்தான் பேசி உள்ளனர். நண்பர்கள் 5 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் என்ன தொடர்பு, ஏன் கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன்களை பறித்துச்செல்ல வேண்டும். சிங்கப்பூரில் இருந்து வந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

சமீப காலமாக பிடிபடும் தீவிரவாதிகள் பலர் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே கார்களில் வந்த மர்ம நபர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவர்களா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: