துறையூர் அருகே த.மங்கப்பட்டியில் இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

துறையூர், பிப்.17: துறையூர் அருகே த.மங்கப்பட்டியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளுகை ஊராட்சியை சேர்ந்தது த.மங்கப்பட்டி. இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் மேல் ஆகிறது. தற்போது நீர்த்தேக்க தொட்டியில் நான்குப்புற கால்களும் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. நீர்த்தேக்க தொட்டி அருகில் அங்கன்வாடி பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே இருப்பதால் நடந்து செல்வோர் மீதும் எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது.
Advertising
Advertising

மேலும் பள்ளிகள் அருகே இருப்பதால் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இடித்து அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் இத்தொட்டி சாலையோரமாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அதிர்வு ஏற்படுகிறது. ஆகையால் எந்த நேரத்திலும் விழலாம் என்ற அபாயத்தில் உள்ளதால் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனடியாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: