×

மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப். 17: விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் பயன்படாத மத்திய பட்ஜெட்டை கண்டித்து திருவாரூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பட்ஜெட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியினை குறைத்துள்ளது மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிதி குறைப்பு மற்றும் விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு எந்தவிதத்திலும் பயன்படாத மத்திய பட்ஜெட் என்று கூறி திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கலைமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் குமாரராஜா, பொருளாளர் பாலையா, மாவட்ட துணை தலைவர் கந்தசாமி, மாநில குழு உறுப்பினர் மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : protests ,Agrarian Workers Union ,
× RELATED இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த...