×

தி.பூண்டி குன்னூர் பள்ளியில்

திருத்துறைப்பூண்டி பிப் 17:திருவாரூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி அருகே உள்ளகுன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார் , ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, துணைத்தலைவர் தவமணிசெங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். மாணவி முத்துச்செல்வி வரவேற்றார்.முகாமில் போக்குவரத்து காவல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன், சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா ஆகியோர் சாலை பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் சொர்ணமுகி , உதவி பேராசிரியர்கள் ராஜகுமாரி, பிரீத்தி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாணவி பத்மபிரியா, மாணவர் விக்னேஷ் தொகுத்து வழங்கினர்கள் .
முடிவில் மாணவி வேம்பரசி நன்றி கூறினார்.

Tags : Dundee Gunnur School ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...