×

திருத்துறைப்பூண்டியில் இலவச பல் சிகிச்சை முகாம்

திருத்துறைப்பூண்டி பிப் 17:
திருத்துறைப்பூண்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச பல் சிகிச்சை முகாமில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவசபல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி தலைவர் சற்குணநாதன் தலைமை வகித்தார்.
இதில் செயலாளர் நாகலிங்கம். மற்றும் முன்னாள் தலைவர்கள் ,முன்னாள் துணை ஆளுநர்கள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொண்டனர். மருத்துவர்கள்அரவிந்த் , அக்ஷயா ஆகியோர் சிகிச்சையை மேற் கொண்டனர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags : Free Dental Camp ,Tirupur ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் மீது வழக்குப்பதிவு