×

பயறு வகை பயிர்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவது எப்படி?

மன்னார்குடி, பிப். 17: உலக பயறு வகை பயிர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் நடைபெற்ற நெல் தரிசில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறு வதற்கான செயல் விளக்க நிகழ்ச்சி வடுவூர் அருகே நடைபெற்றது.
நீடா வேளாண்மை அறிவியல் நிலையம் வாயிலாக தமிழ்நாடு நீர்வள நில வளத் திட்டத்தில் நெல் தரிசில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவதற்கான செயல் விளக்கமானது மன்னார்குடி அருகே வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் நடைபெற்றது.
பயறுவகைப் பயிர்களில் மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலு க்கும் தேவைப்படும் புரதச்சத்தானது அதிகளவில் உள்ளது. தானியப் பயிர் களைக் காட்டிலும் பயறுவகைப் பயிர்களில் புரதச்சத்தானது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. எனவே பயறு வகைப் பயிர்களானது ஏழைகளின் மாமி சம் என்றழைக்கப் படுகிறது.
100 கிராம் உளுந்து மற்றும் பச்சைப்பயிரில் புரதச்சத்து 24 முதல் 25 சதம், மாவுச்சத்து 62 முதல் 64 சதம், நார்ச்சத்து 16 சதம் உள்ளது. வைட்டமின்கள் தயமின், ரிபோப்லவின், நயாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவையும் பயறுவகைப் பயிர்களில் அடங்கி உள்ளன.
மேலும் பயறு வகைப் பயிர்களானது கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் போர்வையாகவும் திகழ்கின்றன. எனவே பயறுவகைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பானது பிப்ரவரி 10ஆம் நாளை உலக பயறுவகைகள் தினமாக 2019ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.
உலக சுகாதார அமைப்பானது ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 80 கிராம் புரதச்சத்து தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் 40 கிராமுக்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி 3.40 மில்லியன் டன்கள் பயறுவகைகள் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. ஆனால் ஆண்டுத் தேவையானது 26 முதல் 27 மில்லியன் டன்கள் ஆகும்.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் .இராம சுப்பிர மணியன் கூறுகையில், பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்வதால் அவற்றின் வேர்முடிச்சுகள் வாயிலாக காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து மண் வளம் அதிகரிக்க காரணமாகத் திகழ்கின்றன என கூறினார்.
வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ் கூறுகையில், உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ் போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பதால் பயிர்கள் நன்கு வளரும் என்றும், மேலும் பயறு வகைப் பயிர்களில் ஊட்டச்சத்து மேலாண்மையில் தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழக பயறு அதிசயத் தினை பூக்கும் தருணத்தில் தெளிப்பதால் பயிர்களானது வறட்சியை தாங்கி பூக்கள் உதிராமல், அதிக காய்கள் பிடித்து 20 முதல் 25 சதம் வரை அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும் என கூறினார்.
மேலும், பயறுவகைப் பயிர்களின் சராசாரி உற்பத்தித் திறனானது இந்திய அளவில் ஒரு எக்டருக்கு 835 கிலோ என்ற அளவில் ஒப்பிடும் போது தமிழ கத்தில் உற்பத்தித்திறன் குறைவு. எனவே பயிறுவகைப் பயிர்களில் உயர் மகசூல் பெறுவதற்கு தரமான சான்றுபெற்ற உயர் விளைச்சல் தரக்கூடிய இரக விதைகள் மற்றும் சரியான விதையளவைப் பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்து சரியான பருவத்தில் விதைப்பது, சரியான பயிர் எண்ணிக்கை யை பராமரிக்க வரிசைக்கு வரிசை 30 செமீ செடிக்கு செடி 10 செமீ இருக்கு மாறு ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் பராமரிப்பது மற்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண் டும் என்பதனை எடுத்துக் கூறினார்.
எனவே விளைச்சலைப் அதிகரிக்க முதன்மையானது சான்று பெற்ற உயர் விளைச்சல் இரக விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பது ஆகும். அதன் பொருட்டு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீ ரியா கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது. செயல்விளக்கத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயறுவகைப் பயிர்கள் சாகுபடி குறித்த கையேடு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை திட்ட உதவியாளர்கள் சுரேஷ், கிருபாகரன் மற்றும் சமீர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்