×

வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம் மதுவன ராமசுவாமி கோயிலில் சீதா கல்யாண உற்சவம்

வலங்கைமான், பிப். 17: வலங்கைமான் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள மதுவன ராமசுவாமி கோயிலில் நடைபெற்ற சீதா கல்யாணத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு அக்ரஹாரத்தில் பழமையான மதுவனராமசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சீதா கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பத்தாம் ஆண்டு சீதா கல்யாணம் காலை சீர்வரிசை எடுத்துவரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனையடுத்து சீதா கல்யாண உற்சவமும், மாங்கல்யதானமும் விழாவின் முக்கிய நிகழ்வான சீதா கல்யாணமும், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வீணாகான ஆஞ்சநேயர் நற்பணி மன்றத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்திருந்தனர்.
வடுவூர் சாத்தனூரில் செயல்விளக்கம்

Tags : Sita Kalyana Festival ,Valangaiman South Agrahara Madhuvan Ramaswamy Temple ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...