×

வலங்கைமான் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது

வலங்கைமான், பிப். 17: வலங்கைமான் அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆண்டாங்கோயில் பகுதியில் அரசு அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரியை திருவாரூர் ஆர்.டி.ஓ ஜெயிரிதா பிடித்து கிராம நிர்வாக அலுவலர் ஹரிகரசுதனிடம் ஒப்படைத்தார். அதனையடுத்து கிராமநிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லாரி டிரைவரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னையன் மகன் ஆறுமுகத்தை (42) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மன்னார்குடி சிறையில் அடைத்தனர். ஆதிச்சமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் எடுக்க பயன்படுத்தியதாக கிராமநிர்வாக அலுவலர் மைக்கேல்ஜெரோசின் கொடுத்த புகாரின்பேரில் ஜே.சி.பியை வலங்கைமான் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Valangaiman ,
× RELATED திருவள்ளூரை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா?: மருத்துவமனையில் அனுமதி