×

குடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது திருவாரூர் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி பிப் 17:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு
மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் நிருபர்களிடம் கூறியதாவது,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் 50 நாட்களுக்கும் மேலாக போரட்டம் நடைபெற்று கொண்டு இருகுகிறது.வெள்ளிகிழமை
சென்னையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளனர்.
பெண்கள், முதியோர் என பலரும் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான தடியடியில் காயமடைந்துள்ளனர்.அறவழியில் போராடுபவர்கள் மீது காவல்துறை நடத்தியுள்ள இத்தாக்குதல் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் எதிரானது.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை உரிமைக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி இருப்பது சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளவன்முறையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.
நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தின்படி எங்களுடைய போராட்டத்தை அமைதியான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசாங்கம் காவல்துறையை ஏவிவிட்டு அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்துவது கண்டனத்துக்குரியது.தடியடி போன்ற சம்பவங்களின் மூலமாக தமிழக அரசு இந்த மக்களை அச்சுறுத்த நினைத்தால் மக்கள் போராட்டம் இன்னும் வீரியம் பெறும்.
அடக்குமுறைக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம். காயமடைந்த மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
போராட்டத்தில் பங்கு கொண்டோர் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும்.
தடியடி சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு என்.ஆர். சி, சி. ஏ. ஏ. மற்றும் என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை மக்கள் போராட்டம் ஓயாது என்றார்.


Tags : Thiruvarur Dawheed ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...