×

விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள வேளாண் பொருட்கள் ஆய்வு

அரியலூர், பிப்.17: அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு நீர்நிலைகளில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளது. விவசாயிகள் விவசாயம் செய்ய வேளாண் பொறியில் துறையின் மூலம் உழவு இயந்திரம், பவர் டில்லர், வைக்கோல் கட்டும் கருவி போன்ற இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்ட்டு வருகிறது.
நவீன வேளாண்மை இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திட தொழில் முனைவோர், விவசாய சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் 40 சதவிதம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 2 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் சரி பார்த்த பிறகு மானிய இருப்புத்தொகை பயனாளியின் வங்கி கணக்கில் திரும்ப வழங்கப்படும். மேலும், பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய கூடாரம் உலர்த்தி, வேளாண் வாடகை சேவை மையம் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை அரியலூர் உதவி செயற்பொறியாளர் நெடுமாறன் கைப்பேசி எண் (9443399525) மற்றும் ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் இளவரசன் (கைப்பேசி எண் 9442112969) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்தார்.
இன்று உதயநத்தம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி காமராஜர் நிலத்தில் ரூ.1 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையினையும், ரூ.2 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள மினி டிராக்டரின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், முருங்கை, கடலை, மக்காச்சோளம் ஆகியவை சொட்டுநீர் பாசன மூலம் பயிரிடப்பட்டுள்ள நிலத்தினையும் பார்வையிட்டார்.
மேலும், விவசாயிகள் தங்களுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள வேளாண் கருவி மூலம் நாங்கள் சொந்த நிலங்களில் குறைந்த செலவில் வேளாண்மை செய்து அதிக லாபம் பெற முடிகிறது என தெரிவித்தனர். ஆய்வின்போது, செயற்பொறியாளர் எட்வின் பார்லி, உதவி செயற்பொறியாளர் இளவரசன், உதவிப் பொறியாளர் ஷிலாராணி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags : Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...