×

விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் பெரம்பலூரில் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக்குழுகூட்டம்

பெரம்பலூர்,பிப்.17: பெரம்பலூரில் கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் கூட்டுறவு ஒன்றிய நிர்வாகக்குழு தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான அறப்பளி முன்னிலை வகித்து வரவுசெலவு அறிக்கை வாசித்தார். சங்க வளர்ச்சி குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய் யப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீரபாண்டியன், கொளஞ்சிநா தன், சங்கர், செல்வராசு, செங்கமலை, செல்வராஜ், பாலு, ரவி, அன்பழகன், சிவகுமார், சௌந்தர்ரா ஜன், செல்வமணி, லலிதா, சித்ரா, கல்யாணி, செல்லம், கண்ணகி, மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத் தலைவர் பாஸ்கர் வரவேற்றார். முடிவில் கூட்டுறவு ஒன்றிய பணியாளர் சாமி நாதன் நன்றி தெரிவித்தார்.

Tags : Perambalur ,Farmers' Union Meeting Co-operative Union Executive Committee ,
× RELATED பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி...