×

நூற்றாண்டு விழாவையொட்டி ரெட்கிராஸ் சார்பில் டூவீலர் தொடர் பேரணி முன்னேற்பாடு ஆயத்த கூட்டம்

அரியலூர், பிப்.17: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தமிழ்நாடு கிளை தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இவ்விழாவினை கொண்டாடும் வகையில் இம்மாதம் 21ம் தேதி தத்தனூர் தனியார் கல்லூரி வளாகத்தல் ரத்ததான முகாமும், மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் மோட்டார் சைக்கிள் பேரணி 25ம் தேதி அரியலூரில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஆயத்த கூட்டம் நேற்று தலைவர் நல்லப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 6 ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. பேரணி அரியலூர் அண்ணா சிலையில் தொடங்கி செந்துறை, வாரியங்காவல், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர், சுத்தமல்லி, விளாங்குடி, கீழப்பழூர், திருமானூர், திருமழப்பாடி, செம்பியகுடி வரை சென்று திருச்சி மாவட்டதிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஆறு நபர்களுக்கும் மாநில ரெட்கிராஸ் அலுவலகத்தில் பிப்ரவரி 28ம் தேதி மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.
பேரணி நடைமுறைகளை பொருளாளர் ஜெயராமன் நிர்வாக குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சந்திரசேகர். மகாலிங்கம். இளங்கோவன், சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், கன்வீனர் சிவசங்கர், பொருளாளர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் கலையரசன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் இணைக்கன்வீனர் சண்முகம் நன்றி கூறினார்.

Tags : Tweeler ,meeting ,centenary ,Red Cross ,
× RELATED விளையாட்டு துளிகள்