×

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பரிசளிப்பு, பாராட்டு விழா

பெரம்பலூர், பிப்.17: பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழகத்தின் சார் பாக 42வது பரிசளிப்பு மற் றும் பாராட்டுவிழா நடைபெ ற்றது.
பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக, 42வது பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, சங்குப்பேட்டை அருகே உள்ள ராசி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவ ட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணி, மாவட்டப் பொருளாளர் துரை ஆகியோர் முன்னி லை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர பாண்டியன் வரவேற்றார். விழாவில் கலைசுடர்மணி வாசு கலந்துகொண்டு, கட ந்தஆண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெ ண்பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீதத் தேர்ச்சி அளித்த ஆசிரியரு க்கும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரன், மாநில சிறப்புத் தலை வர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பெரம்பலூர் மாவட்ட கவரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ராஜா, முன்னாள் மாநில தலைவர் நல்லுசாமி, முன்னாள் மாநில துணைத்த லைவர் தங்கராஜ், முன் னாள் மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் 100 சதவீதத் தேர்ச்சியை அளித்த ஆசிரியர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவியர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஒன்றிய நிர் வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆலத்தூர் ஒன்றிய வட்டத் தலைவர் இளஞ்செ ழியன் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu ,Teachers College ,
× RELATED தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு