×

துர்நாற்றத்தால் மக்கள் அவதி அணைக்குடம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 57 பேர் பயனடைந்தனர்

தா.பழூர், பிப்.17: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்குடம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தட்சணாமூர்த்தி தலைமை வகித்தார். இதில் ரத்தம், சளி ,சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அணைக்குடம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 946 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னதாக சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். ஜெயங்கொண்டம் மகப்பேறு மருத்துவர் அனுசுயா, பொதுநல மருத்துவர் செந்தில்குமார், சுத்தமல்லி மருத்துவமனை மருத்துவர் வேல்முருகன், குணமங்கலம் மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார் மற்றும் செவிலியர்கள், மருந்தாலுநர்கள் கலந்து கொண்டனர் .
சிறப்பு விருந்தினராக அணைக்குடம் ஊராட்சிமன்ற தலைவர் தேவிகா இளையராஜா கலந்து கொண்டார். முகாமில் மேல்சிகிச்சைக்காக 57 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியின் நிறைவாக உதயநத்தம் மருத்துவமனை மருத்துவர் சரவணன் நன்றி கூறினார்.

Tags : camp ,village ,
× RELATED ஊரடங்கில் 5 நாள் கடந்த நிலையில் முகாம்...