×

நேரடி கொள்முதல் நிலையத்தில் கூலி உயர்த்தி வழங்க வேண்டும்

கொள்ளிடம், பிப்.17: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் நெல்மூட்டைகளை சுமந்து லாரியில் ஏற்றி விடும் சிரமமான பணியை செய்து வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு நெல்மூட்டைகளை எடுத்து வந்தவுடன் மூட்டைகளில் உள்ள நெல்லை வெளியே எடுத்து இயந்திரத்தில் இட்டு தூற்றிய பிறகு எடை வைத்த நெல்லை மூட்டையாக தைத்து கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கின்றனர். இதற்கு ஒரு மூட்டைக்கு ஒரு ரூபாய் 68 பைசா வீதம் கூலி கிடைக்கிறது. பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை லாரியில் ஏற்றி விடுவதற்கும் ஒரு ரூபாய் 68 பைசா வீதம் மட்டுமே கூலியாக பெற்று வருகின்றனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் மூட்டைகளின் எண்ணிக்கையை வைத்து கூலியை பிரித்து கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒவ்வொரு தொழிலாளார்களுக்கு ரூ.200 முதல் 250 வரை மட்டுமே கூலி கிடைக்கிறது என்கின்றனர். தொழிலாளர்கள் காலை முதல் மாலை வரை நெல்மூட்டைகளை சிரமத்துடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினந்தோறும் மிக குறைந்த கூலியை மட்டுமே பெற்று வருகின்றனர். கடந்த பல வருடங்களாக குறைந்த ஊதியத்தை மட்டுமே தொழிலாளார்கள் பெற்று வருகின்றனர். எனவே கூடுதலாக கூலி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : wage elevator ,
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்