×

பக்தர்கள் திரண்டனர் கரூர் தாலுகா அலுவலகம் முன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.17:  கரூர் தாலுகா அலுவலகம் முன், சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கரூர் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் மதர்ஷாபாபு தலைமை வகித்தார்.கோவை அப்பாஸ் கண்டன உரையாற்றினார். ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Devotees ,office ,Karur ,taluk ,
× RELATED தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்