×

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தோகைமலை, பிப்.17: தோகைமலை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த மாசி மாத தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டி மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை அஸ்டமி சிறப்பு தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி சமேதா சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு பால், பண்ணீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வடை மாழை அணிவித்து தேங்காய், பூசனிக்காய் விளக்கு ஏற்றி குடும்பங்களில் வருமை நீங்கி செல்வ செழிப்புடன் மகழ்ச்சியுடன் வாழவும், தொழில் சிறக்கவும், வியாபாரங்கள் பெருகவும், இரவு நேர பயணங்கள் பயமின்றி இருக்கவும், வாகனங்கள், கால்நடைகள் வளர்ப்பு உட்பட குடும்பங்கள் சிறந்து விழங்க தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜையில் பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.
இதேபோல் சின்னரெட்டியபட்டியில் உள்ள ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், டி.எடையபட்டி ரெத்தினகிhPஸ்வரர் ஆகிய திருக்கோவில்களில் நடந்த மாசி மாத தேய்பிறை அஸ்டமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

Tags : temples ,Shiva ,Tebirupa Ashtami ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு