×

கரூர் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை அமைச்சர் ஆய்வு

கரூர், பிப்.17: கரூர் நகராட்சி துப்புரவு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கரூர் நகராட்சி தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோயிலை சுற்றியுள்ள தெருக்கள், சவரிமுத்துதெரு, காமராஜபுரம் பகுதி தெருக்களில் துப்புரவு பணிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
தெருக்கள், கழிவுநீர்வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என துப்பபுரவு பணியாளர்களிடம் கூறினார். கரூர் நகராட்சியில 48 வார்டுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள அனைத்து வார்டுகளிலும் 9 துப்புரவு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தினமும் துப்புரவு பணிகள் செய்ய 650 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் காலை வீடுவீடாக சென்று மக்கும்குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கி, கழிவுநீர்கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குடிநீர் விநியோகம் சீரமைக்க அனைத்து வீடுகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டு தாந்தோணி, இனாம் கரூர், கரூரில் 3நாட்களுக்கு ஒருமுறையும், அதிக பட்சமாக 5நாட்களுக்கு ஒருமுறையும் சீரான குடிநீர் வழங்கப்படுகிறது என்றார். டிஆர்ஓ ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சுதா, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், கூட்டுறவு தலைவர்கள் நெடுஞ்செழியன், ஜெயராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : cleaning work ,Karur ,municipality ,
× RELATED கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவு