×

விவசாயிகள் வலியுறுத்தல் ஏற்றுமதியாளர்கள் வருத்தம் விதைகளை பயன்படுத்தி

கரூர் புலியூர் முடக்குச்சாலையில்
அகற்றப்படாத கழிவு மூட்டைகளால் சுகாதார கேடு
கரூர், பிப்.17: அகற்றப்படாத கழிவு மூட்டைகளினால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
கரூர்-திருச்சி சாலையில் புலியூர் முடக்குச் சாலையில் வடக்குப்பாளையம் ஓரத்தில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.
கோழி இறைச்சிக்கடைகளில் உள்ள கழிவுகளை மூட்டையாக கட்டி வைத்து இரவுநேரங்களில் இப்பகுதியில் வந்து போட்டுவிட்டுசெல்கின்றன, தீனிக்காக திரியும் பறவைகள், நாய்கள் இவற்றை தின்பதால் குப்பைகழிவுகள் சிதறிக்கிடக்கின்றன.
 இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் குடியிருப்போர் துர்நாற்றத்தால் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் கொசுத்தொல்லை போன்ற சுகாதாரகேட்டை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. உடனே கழிவுகளை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : exporters ,
× RELATED விவசாயிகளுக்கு வழங்கப்படும்...