×

பொதுமக்கள் முகம்சுழிப்பு தோகைமலை அருகே டூவீலர் மோதி கூலி தொழிலாளி பலி

தோகைமலை, பிப்.17: தோகைமலை அருகே டூவீலர் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கீரனூர் ஊராட்சி தளுமக்கவுண்டனூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (50). விவசாயி கூலிதொழிலாளி. நேற்று முன்தினம் வேலுச்சாமி தனது ஆடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக தோகைமலை பாளையம் மெயின் ரோட்டில் உள்ள கோரிமேடு அருகே நடந்து சென்றார்.
அப்போது டூவீலரில் அதிவேகமாக வந்த கடவூர் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர் மகன் புகழேந்தி (24) நடந்து சென்ற வேலுச்சாமி மீது மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட வேலுச்சாமி படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் புகழேந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெரியபாளையம் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து