×

ஜம்மு காஷ்மீரில் 22ம் தேதி தேசிய ஒருங்கிணைப்பு முகாம் அரசு கல்லூரி மாணவி தேர்வு

கரூர், பிப்.17: ஜம்மு காஷ்மீரில் வரும் 22ம்தேதி முதல் 28ம்தேதி வரை தேசிய ஒருங்கிணைப்பு முகாம் நடைபெறுகிறது. கரூர் அரசு கலைக்கல்லூரி கணினி அறிவியல்துறை 2ம் ஆண்டு மற்றும் நாட்டு நலப்பணிதிட்ட மாணவி கவிதா இம்முகாமில் பங்கேற்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நாட்டுநலப்பணி தன்னார்வலர்களுக்கான விருதுகளை அரசு கலைக்கல்லூரி கணினி அறிவியல்துறை மற்றும் நாட்டுநலப்பணி திட்டமுகாம் மாணவர்கள் பவானி, ராஜகோபால், முத்துமணி ஆகியோர் பெற்றனர்.
மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் கவுசல்யாதேவி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயந்தி, மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags : National Integration Camp Govt ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது