×

மணல் கடத்தல் கும்பல் தப்பியோட்டம்

பவானி பிப். 17:   பவானி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பவானி தாசில்தார் பெரியசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பவானியை அடுத்த காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம், சீதபாளையம், சின்னமோளபாளையம், ஜம்பை உள்ளிட்ட கரையோரப் பகுதியில் இச்சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சேர்வராயன்பாளையம் பகுதியில் மணல் திருடுவதற்காக பேரல்களைக் கொண்டு, பரிசல் போல் தயார் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அதிகாரிகள் வருவதை பார்த்த மணல் கடத்தல் கும்பல் தப்பியோடிவிட்டது. இதைத்தொடர்ந்து பேரல்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பவானி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.  மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது
சத்தியமங்கலம், பிப். 17:   சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு 6ம் நம்பர் டவுன்பஸ் புஞ்சைபுளியம்பட்டி செல்வதற்காக புறப்பட்டது. பஸ்சில் கண்டக்டர் ரமேஷ் பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியபோது குடிபோதையில் இருந்த பயணி கனகராஜ் என்பவர் கண்டக்டர் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டார். டிக்கெட் வாங்காமல் தொடர்ந்து பயணம் செய்த நிலையில் அரியப்பம்பாளையம் சந்திப்பில் பஸ்சை நிறுத்தி பயணி கனகராஜிடம் பயணச்சீட்டு வாங்குமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பயணி கனகராஜ் கண்டக்டர் ரமேசை தாக்கினார்.  கண்டக்டர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடிபோதையில் இருந்த கனகராஜை பிடித்து விசாரிக்கும்போது கனகராஜ் தப்பியோடினார். தப்பியோடிய பெரியூரைச் சேர்ந்த கனகராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...