×

தற்போது அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்துள்ளது.

நாளுக்குநாள் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் கரையோரத்தில் உள்ள மணல்மேடுகள் வெளியே தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக, அணையில் இருந்து முதலைகள் வெளியேறி கரையோரம் அடிக்கடி வந்து செல்கிறது.
நேற்று முன்தினம், ஒரு முதலை அணையில் தண்ணீர் வற்றிய கரையோர பகுதியில் அங்கும் இங்குமாக உலா வந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியபடி சிதறி ஓடினர்.

ஆழியார் அணையில் தண்ணீர் வற்றி வருவதால், தண்ணீரில் இருந்து முதலை வெளியேறி பகல் நேரத்திலயே உலா வருகிறது. இதனால், அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி மாவட்டத்தில் அதல பாதாளத்திற்கு...