பயணியை தாக்கிய டிரைவர், கண்டக்டர்

கோவை, பிப்.17:  கோவை உக்கடத்தில் இருந்து ஒண்டிப்புதூருக்கு நேற்று மதியம் தனியார் டவுன்பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ், லங்கா கார்னர் அருகே வேகமாக சென்றுள்ளது. அப்போது பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர் பஸ்சை மெதுவாக ஓட்டுங்கள், எதற்கு இவ்வளவு வேகம் என கண்டக்டரிடம் கேட்டுள்ளார். அப்போது கண்டக்டர், உங்க வேலையை பாருங்க, பஸ் எப்படி ஓட்டவேண்டும் என எங்களுக்கு தெரியும் எனக்கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், நாங்கள் பஸ்சில் இருக்கிறோம், பாதுகாப்பாக நாங்கள் போகவேண்டாமா என கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் அந்த பயணியை பஸ்சில் வைத்து அடித்து தாக்கினர். பஸ்சை பாலத்திற்கு நிறுத்தி விட்டு நடத்திய இந்த தாக்குதலை பஸ்சில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரை பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்ற முன் வரவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் கேட்ட போது, ‘‘ தகவல் வந்தது, புகார் தந்தால் வழக்கு பதிவு செய்வோம், என்றனர்.

Related Stories: