×

மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் பார் அடித்து நொறுக்கப்பட்டது

பெ.நா.பாளையம், பிப்.17:  கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணர் பிரிவு ரயில்வே கேட் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் அங்குள்ள பாரில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மது வாங்குவதில் பார் ஊழியர்களுடன் இரண்டு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு இருந்தவர்கள் சமரசம் செய்தனர்.
பின்னர், அங்கிருந்து சென்றவர்கள் சிறிது நேரத்தில் கூட்டமாக வந்து பாரில் இருந்த டேபிள், சேர் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் பார் ஊழியர்களை சரிமாரியாக தாக்கியதில் இருவரின் மண்டை உடைந்தது. அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இரு தரப்பினரையும் துடியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : dispute ,
× RELATED தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை...