அனுமதியின்றி தங்கியுள்ள வௌிநாட்டு தொழிலாளர்கள்

கோவை, பிப்.17:  நைஜீரியா உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்திற்கு பனியன் நிறுவனங்கள், ஜவுளி, பவுண்டரி உட்பட பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி கல்வி கற்கின்றனர்.
Advertising
Advertising

வெளிநாட்டு நபர்களை கண்காணிக்க குடியேற்றம் மற்றும் தூதரக நிர்வாகத்தினர் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளனர். வெளிநாட்டினர் தமிழகத்திற்கு வந்தால், அவர்களின் வருகை குறித்த விவரங்களை சி படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட சரக போலீசில் ஒப்படைக்கவேண்டும்.

24 மணி நேரத்திற்குள் இந்த படிவம் போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்து சேர வேண்டும். வெளிநாட்டினர் வருகை குறித்த தகவல்களை தெரிவிப்பதில் தொழில் நிறுவனத்தினர், ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியம் காட்ட கூடாது.

ஓட்டல், லாட்ஜில் தங்கியிருப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெளிநாட்டினர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளாமல் விட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும். வெளிநாட்டு பயணிகள் வருகை குறித்த படிவங்களை ஒப்படைக்காவிட்டால், தகவல் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர், மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி, அரசூர், கருமத்தம்பட்டி, கணியூர், சூலூர் உள்ளிட்ட பகுதியில் சிலர் விசா காலம் முடிந்து தங்கியிருப்பதாக தெரிகிறது.

வெளிநாட்டினர் குறித்து புறநகர் போலீசார் தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உரிய ஆவணமில்லாத வெளிநாட்டினர் தூதரகம் மூலமாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.\

Related Stories: