வ.உ.சி பூங்காவிற்கு செல்ல தடை

கோவை, பிப்.17:  கோவை வ.உ.சி பூங்கா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குடியுரிமை சட்ட திருத்திற்கு எதிர்ப்பு காட்டி பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து நேற்று முன் தினத்தில் இருந்து பூங்கா, மைதான வளாகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மைதான நுழைவு பகுதியில் பேரி கார்டு வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வணிக கடைகளுக்கும், உயிரியல் பூங்காவிற்கு மட்டும் வாகனங்கள் சென்று வர அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பூங்கா மைதானம், பிரதான ரோட்டில் குடியுரிமை விவகார போராட்டம், பேரணி காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் போராட்டம், பேரணிக்கு அனுமதி கேட்டு வருகின்றனர். போக்குவரத்து இடையூறு காரணமாக போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: