×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில்

காங்கயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்துக்கு விற்பனை
காங்கயம்,பிப்.17:காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.22 லட்சத்திற்கு விற்பனையானது.
காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக 138 கால்நடைகள் வந்திருந்தன.
இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரம்  வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது, காளைக்கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்றைய சந்தையில் 65 கால்நடைகள் ரூ.22 லட்சத்திற்கு விற்பனையானது.

Tags : Old Fort Kottayam ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது