×

திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

திருப்பூர்,  பிப்.17:திருப்பூர் பல்லடத்தில் தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு  மையத்தின் சார்பில் லாபத்தை அதிகரிக்க வழிகாட்டும் ‘லீன்’ உற்பத்தி இலவச  கருத்தரங்கம் இன்று(17ம் தேதி) நடக்கிறது.
திருப்பூர்  தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு மையத்தின் சார்பில் நடக்கும்  கருத்தரங்கில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், செலவினங்களை குறைத்து, உற்பத்தியை  பெருக்குவது, மூலப்பொருட்கள் வீணாவதை தடுப்பது மிகவும் அவசியமாகிறது.
அனைத்துவகை நிறுவனங்களும், செலவை குறைத்து, உற்பத்தியையும், லாபத்தையும்  அதிகரிக்க, ‘லீன்’ நுட்பங்கள் கைகொடுக்கின்றன.
திருப்பூர் ஆடை உற்பத்தி  துறையினர், ஒருங்கிணைந்து, குழுமங்களை உருவாக்கி, தங்கள் நிறுவனங்களில்  ‘லீன்’ நுட்பங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த அரிய வாய்ப்பை தொழில்  முனைவோர்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Skill Development Seminar ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது