×

இலவச மருத்துவ முகாம்

தாராபுரம்.பிப்.17:தாராபுரம் நகராட்சியில் 300க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய இம்முகாமில் நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜ்மோகன், சங்கர், அருள் பிரபாகரன், தர்மராஜ், பணி ஓய்வு பெற்ற ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவபாலன், டாக்டர்கள் சத்யராஜ்,விஸ்வநாதன், திவ்யா ,சௌகத் அலி,சேகர் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு எலும்பு சிகிச்சை, சர்க்கரை நோய், தோல், கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் அனைத்து விதமான உடல் பரிசோதனைகளையும் இலவசமாக மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளையும் மருந்து மாத்திரைகளையும் வழங்கினர். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...