×

ஐம்பெரும் விழா

உடுமலை,பிப்.17:தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின், கோவை திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்பு சார்பில்,  ஐம்பெரும் விழா திருமூர்த்திமலையில் நடந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் 261வது பிறந்த நாள் விழா, தளி எத்தலப்ப நாயக்கர் பிறந்தநாள் விழா, சங்கரவேலுவுக்கு பாராட்டு விழா, ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா, மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழா ஆகியவை நடந்தது.
மாவட்ட தலைவர் ராமு தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் கருணாநிதி வரவேற்றார். நிர்வாகிகள் ராமலிங்கம், சுப்புராஜ், மகுடீஸ்வரி, ஈஸ்வரன், முனுசாமி, ரஞ்சித், ஜெய்கணேஷ், ஜெகதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தண்டபாணி தீர்மானங்களை வாசித்தார்.விழாவில், தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும், கட்டபொம்மனுக்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும், அவரது பிறந்த நாளான ஜனவரி 3ம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், காட்டுப்பன்றிகளை தடுக்க வேலி அமைக்க வேண்டும், தமிழகத்தில்  அனைத்து கம்பள சமுதாய மக்களையும், சீர் மரபினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும், திருமூர்த்திமலையில் நடைபெறும் தீப திருவிழாவின்போது எத்தலப்ப நாயக்கரின் வம்சா வளியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில நிர்வாகிகள் செல்லக்காமு, ராமகிருஷ்ணன், முருகவேல், மணி, தங்கராஜ், மாநில தலைவர் சங்கரவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட செயலாளர் சபரிமுத்துவேல் நன்றி கூறினார்.

Tags : ceremony ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா