×

வினாடி- வினா போட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

காங்கயம்,பிப்.17:காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வினாடி- வினா போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
காங்கயம் அருகே உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  கணிதத் துறை மாணவிகள் காயத்ரி, பிரின்சி, குளோரி மற்றும் கார்த்திகா ஆகியோர் பங்கேற்று மூன்றாம் பரிசை வென்றனர்.
மாணவிகளை கல்லூரி முதல்வர் அனுராதா மற்றும் கணித துறை தலைவர்  சீனிவாசன் பாராட்டினர். மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : State College ,
× RELATED புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை...