×

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு

ஈரோடு, பிப். 17: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் பெருந்துறை பகுதியில் 4 இடங்களில் மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்ய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உத்தரவிட்டுள்ளதாக திருப்பூர் எம்.பி.சுப்பராயன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பூர் எம்.பி.சுப்பராயன் கூறியுள்ளதாவது: திருப்பூர் பாரளுமன்ற தொகுதியில் பவானி லட்சுமி நகர் முதல் செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பாக பெருந்துறை பைபாஸ் ரோட்டில் கடந்த ஒரு ஆண்டில் 300க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் விபத்துகளால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முக்கியமான இணைப்பு சாலைகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பதும், சர்வீஸ் ரோடுகள் அமைத்து தர வேண்டும் என்பதும் பெருந்துறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை-காஞ்சிக்கோவில்-கவுந்தப்பாடி குறுக்குசாலை, பெருந்துறை-பெத்தாம்பாளையம்-கவுந்தப்பாடி குறுக்குசாலை, பெருந்துறை-துடுப்பதி-மாக்கினாங்கோம்பை குறுக்குசாலை, கொளத்துப்பாளையம்-விஜயமங்கலம் குறுக்குசாலை ஆகிய 4 இடங்களில் உயர்மட்ட பாலம் மற்றும் பவானி லட்சுமி நகர் முதல் செங்கப்பள்ளி வரை 43 கி.மீட்டரில் சர்வீஸ் ரோடுகள் இல்லாத இடங்களில் சர்வீஸ் ரோடுகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு அமைச்சர் நிதின்கட்கரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 4 இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.

Tags : bridges ,Peru ,accidents ,highway ,
× RELATED ஐ.டி., ஈ.டி ரெய்டு நடத்தி, மிரட்டி...