×

108 ஆம்புலன்ஸ் காலி பணியிடங்களுக்கு ஈரோட்டில் இன்று நேர்காணல்

ஈரோடு, பிப்.17: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 முதல் 30 வயதுக்குட்பட்ட பி.எஸ்.சி. நர்சிங், டி.ஜி.என்.எம்., மற்றும் அனைத்து பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். மாதம் ரூ.13,760 ஊதியம் மற்றும் இதரப் படிகள் வழங்கப்படும்.

ஓட்டுநர் பணியிடத்துக்கு 24 முதல் 35 வயதுக்குட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமத்துடன் மூன்றாண்டு நிறைவு பெற்று, பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,265 ஊதியம் மற்றும் இதரப் படிகள் வழங்கப்படும். இப்பணி 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு மற்றும் பகல் என மாறி வரும். தகுதியான நபர்கள், ஓட்டுநர் உரிமம், கல்வி தகுதி சான்றுடன் வரும் இன்று (17ம் தேதி) ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நேரில் பங்கேற்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் கொரோனாவால்...