வலிப்பு நோயால் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

ஈரோடு, பிப். 17: கவுந்தப்பாடி அருகே மந்தக்காட்டுரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (47). தறிப்பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுப்ரமணி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சுப்ரமணி அருகில் உள்ள பாலக்காட்டூரில் உள்ள கிணற்றில் துணி துவைக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் சுப்ரமணியை தேடி சென்றபோது அவர் கிணற்றில் இறந்து கிடந்தார்.

Advertising
Advertising

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.

இவர் கிணற்று பகுதியில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வலிப்புநோய் வந்து கிணற்றிற்குள் விழுந்துள்ளார். பின்னர் நீரில் மூழ்கி சுப்பிரமணி இறந்தது தெரிய வந்தது.

Related Stories: