×

தாளவாடி மலைப்பகுதியில் இரவில் சாலையில் நடமாடிய சிறுத்தை

சத்தியமங்கலம்,  பிப். 17:  தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சிறுத்தை ஹாயாக நடந்து  சென்ற சம்பவம் மலை கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி  உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில்  வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி  ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று  அதிகாலை தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது  நண்பர்கள் 3 பேர் தலமலையிருந்து காரில் தாளவாடி செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

நெய்தாளபுரம் அருகே வனச்சாலையில் சென்றபோது சாலையில் ஹாயாக ஒரு சிறுத்தை நடந்து சென்று கொண்டிருந்ததைக்கண்டு  அதிர்ச்சியடைந்தனர். சாலையில் கார் வருவதைக்கண்ட சிறுத்தை அசராமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தது. சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து  சென்ற சிறுத்தை சாலையோர வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சாலையில்  சிறுத்தை ஹாயாக நடமாடிய சம்பவம் தாளவாடி மலைப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : road ,Talawadi Mountain ,
× RELATED சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில்...