லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஈரோடு, பிப். 17: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (26). இவர் காவேரிரோடு பழைய ரிஜிஸ்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர் வந்துள்ளார். பின்னர் தன்னிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் திருநாவுக்கரசு லாட்டரி சீட்டுகள் வாங்க மறுத்த நிலையில் முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

Advertising
Advertising

இதேபோல ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியவலசு லால்பகதூர் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் கனிராவுத்தர்குளத்தில் இருந்து அக்ரஹாரம் செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரோடு கோட்டை முனியப்பன்கோவில் சந்து பகுதியைச் சேர்ந்த உதயச்சந்திரன் (56), பெரியஅக்ஹாரம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகிய இருவரும் சதீஷ்குமாரிடம் லாட்டரி சீட்டு வங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் லாட்டரி சீட்டு வாங்க மறுத்ததால், சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம போலீசார் உதயச்சந்திரனை கைது செய்தனர். தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.

Related Stories: