பவானியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பவானி, பிப். 17: பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானி பள்ளிவாசல் இமாம் முகம்மது காஜா தலைமை தாங்கினார். இ.கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் வேணுகோபால், மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

Advertising
Advertising

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க மாநிலப் பொருளாளர் ஹசன்னா, ம.ம.க நகரத் தலைவர் சிராஜூதீன், மாவட்ட பொருளாளர் சாதிக்பாட்சா, ஜமாத் தலைவர் பாபு, நிர்வாகிகள் முகம்மது அலி, தர்வேஸ் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: