×

அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம், பிப்.17: அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பங்கேற்றார்.மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி எம்.ஜி சபியுல்லா அன்வாரி தொடக்க உரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் அப்துல் ரெஜாக் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா கலந்துகொண்டு பேசும்போது,தமிழ்நாட்டில் இந்துக்களும், முஸ்லீம்களும் பிரித்து பார்க்கின்ற பேதம் இந்த மண்ணிற்கு கிடையாது. மனிதனை உருவாக்குவதில் மதத்திற்கான பங்கு மிகப்பெரியளவில் உள்ளது. எப்படி பெற்றோர் ஒரு பங்கு, கல்வி ஒரு பங்கோ, அதுபோல் மதம் ஒரு பங்கு. என்னுடைய மதம் சிறந்தது. உன்னுடைய மதம் மோசமானது என்கின்ற போக்கு ஏற்பட்ட பிறகுதான் மோதல் ஏற்பட்டது என்று பேசினார்.இதைத்தொடர்ந்து தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது, வக்கீல் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியினை, முகமது ஹஸனார் தொகுத்தளித்தார். கூட்டத்தில் சிஎப்ஐ விதைகள் கலைக்குழுவினர், ஊர் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா சிங்காரவேலு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கடற்கரைத்தெரு மஹல்லாவாசிகள் செய்திருந்தனர்.

Tags : Adirampattinam ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...