சென்னையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து அதிரையில் சாலைமறியல்

அதிராம்பட்டினம், பிப்.17: சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடந்த 15ம்தேதி இரவு 10 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையை கண்டித்தும் அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.இந்த சாலை மறியலால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertising
Advertising

Related Stories: