×

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்: 35 பேர் மீது வழக்கு

கும்பகோணம், பிப். 17: கும்பகோணத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்றுமுன்தினம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக எஸ்டிபிஐ மாநில பொது செயலாளர் இப்ராகிம் உள்பட 15பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் சிக்கந்தர் உள்பட 20பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Citizenship Law: Case Against 35 People ,
× RELATED தமிழகத்தில் கொரோனாவால்...