பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஞானவேள்வி பூஜை

கும்பகோணம், பிப்.17: கும்பகோணத்தில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 11, பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும், அவர்கள் விரும்பிய துறையில் மேற்படிப்பு படிக்க வேண்டியும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞான வேள்வி பூஜை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் லதா முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் குருசாமி வரவேற்றார். இதில், கணபதி ஹோமம் ஹயக்ரீவ ஹோமம் சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன.

Advertising
Advertising

வேள்வியில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.அரசு பொதுப்பணித்துறை முன்னாள் முதன்மை பொறியாளர் தியாகராஜன், தொழிலதிபர் தர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் பால நவநீதகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.

Related Stories: