×

கும்பகோணத்தில் 3 அதிமுக ஊராட்சி தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்

கும்பகோணம்,பிப்.17: கும்பகோணம் ஒன்றியத்திலுள்ள 3 அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அதிமுகவை சேர்ந்த உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், மானம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி மற்றும் திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் ஆகியோர் நேற்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் முன்னிலையில், தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கணேசன், ஊராட்சி கழக செயலாளர்கள் சண்முகம், இஸ்ரேல், ஒன்றிய பிரதிநிதி ராமநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Kumbakonam ,panchayat leaders ,AIADMK ,DMK ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்து மூன்று...