21ம்தேதி நடக்கிறது உலக நன்மை வேண்டி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கும்பகோணம், பிப்.17: கும்பகோணத்தை அடுத்த துகிலியிலுள்ள துயர் துடைக்கும் மகாமாரியம்மன் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு குத்து விளக்கு பூஜை நடந்தது. மூலவர் மாரியம்மனுக்கு மகா அபிஷேக ஆராதனைகளும், சந்தன காப்பு அலங்காரம் செய்வித்து மகாதீபாராதனை நடந்தது. உற்சவர் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் உலக நலன் வேண்டி 108 குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் சிறப்பு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இதில் துகிலி, அம்மாபேட்டை, திருக்கோடிக்காவல் கிராமவாசிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: