×

கீரனூரை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகள் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.17: கீரனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சுற்றி பல நூறு குக்கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு தங்கள் கிரகமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். கீரனூரை சுற்றியுள்ள பகுதிகளை பெருவாரியான பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பேருந்து இயக்கப்பட்டதோ அந்த பேருந்து மட்டுமே தற்போது வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக தற்போது தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால் கிராமத்திற்கு வரும நகர பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து விட்டது. இதனால் பேருந்து களில் படிகளில் தொங்கிகொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கீரனூர் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் ஒரு சில வழித்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்திற்கு மேல் கூடுதல் பேருந்துகள் இயக்கவிலலை. இதனால் இந்த பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பள்ளிகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் மாணவ,மாணவிகள் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு விரைந்து கீரனூரை சுற்றியுள்ள எந்தெந்த பகுதியில் பேருந்துகள் கூடுதலாக இயக்க முடியுமோ அந்த பகுதியில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். நாள் முழுவதும் பேருந்துகள் வசிதிகள் வேண்டும் என்று கேட்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமமின்றி சென்று வர பேருந்துகள் இயக்க வேண்டும் என்றனர்.

Tags : areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை