×

குறிஞ்சிநகரில் பகுதி நேர நூலகம் திறப்பு

புதுக்கோட்டை, பிப்.17: புதுக்கோட்டை நகராட்சி குறிஞ்சிநகரில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 மைய நூலகம், 11 முழுநேர கிளை நூலகங்கள், 9 பகுதிநேர நூலகங்கள், 29 கிளை நூலகங்கள் மற்றும் 40 ஊர்புற நூலகங்கள் என மொத்தம் 90 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில் 16 லட்சத்து 72 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வாளர்களுக்கென பயனுள்ள வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு பணிக்கான போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கென அதற்குரிய புத்தகங்கள் அமைக்கப்பட்ட தனி பிரிவு, இணையதள வசதி, நகல் எடுக்கும் வசதி, பார்வையற்றோர்களுக்கான சிறப்பு பிரிவு, மூத்த குடிமக்களுக்கான தனி பிரிவு, குழந்தைகளுக்கான பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன என்றார். விழாவில் மவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : library ,Kurinjinagar ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...