×

திருமயத்தில் பாலம் கட்டும் பணிக்கு ேதாண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகனஓட்டிகள் கடும் அவதி

திருமயம்,பிப்.17: திருமயம் பாலம் கட்டும் பணிக்கு சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மவட்டம் திருமயத்தில் இருந்து வி.லட்சுமிபுரம் வழியாக நச்சாந்துபட்டி செல்லும் வழியில் என்.புதூர் பகுதியில் கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. இதனை தொடர்ந்து பாலம் கட்டும்பணி முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தை சாி செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து சுமார் அரை அடி ஆழத்திற்கு சென்று விட்டது.
இதனால் அஐாக்கிரதையாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் இந்த சாலை திருமயம், நற்சாந்துபட்டி, விராச்சிலை பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் அதிக வாகன போக்குவரத்து உள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பள்ளத்தை கடக்கும் போது திடீர் பிரேக் போடும் போது பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நற்ச்சாந்துபட்டி புதூர் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக சாலையில் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலையை உடனே சாி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Thirumayam ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...