×

ஓவியருக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை, பிப்.17: புதுக்கோட்டை மாவட்ட ஓவிய கலைஞர்கள் சார்பில் புகழ்பெற்ற ஓவியர் மாருதிக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது.விழாவிற்கு வசந்தா ராஜா தலைமை தாங்கினார். சீனு.சின்னப்பா முன்னிலை வகித்தார். இதில் குழந்தைகள் நல மருத்துவர் ராமதாஸ், கவிஞர் தங்கம் மூர்த்தி, இலக்கிய பேரவை தலைவர் முத்து சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு ஓவியர் மாருதியை பாராட்டி பேசினர். தொடர்ந்து ஓவியருக்கு தாரிகை வேந்தர் விருது உள்பட பல நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஓவியர்கள் ராகவேந்திரன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : Appreciation Ceremony ,Painter ,
× RELATED மதிமுக பொறுப்பாளருக்கு உவரியில் பாராட்டு விழா