×

பொன்னமராவதியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி,பிப்.17: பொன்னமராவதியில் பொன்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது.முகாமிற்கு ஷைன் லயன்ஸ் சங்கத்தலைவர் சோலையப்பன் தலைமைவகித்தார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் மனமுகந்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் மாணிக்கவேல், நிர்வாக அலுவலர் தர்மராஜ் ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தனர்.

மதுரை தனியார் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கண் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் பொது மருத்துவப்பரிசோதனை செய்து மருந்து மாத்திரை வழங்கினா். இதில் 150 குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர்.Tags : Free Medical Camp ,Ponnamaravathi ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...