×

ஓய்வு பெற்ற அரசு கருவூலக ஊழியர் மீது சரமாரி தாக்குதல்

புதுச்சேரி, பிப். 17: புதுவை அரியாங்குப்பம் அடுத்த டிஎன் பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன் (60). அரசு கருவூலகத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். நேற்று முன்தினம் காலை இவர், காரில் அரியாங்குப்பம் கோட்டைமேடு பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது டிஎன் பாளையத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் முருகன், பின்னால் காரில் வேகமாக மோதுவது போல் வந்துள்ளார். இதனால் அவருக்கும், சாமிநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாமிநாதனின் காரை வழிமறித்து, முருகன் அவரை தரக்குறைவாக திட்டி கையால் சரமாரி தாக்கியுள்ளார்.இது குறிதது சாமிநாதன், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். முருகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Volley attack ,Treasury ,
× RELATED அரசு ஊழியர் மருத்துவ செலவை அரசே ஏற்கும்